மழை குறுக்கீடு காரணமாக 4 பந்துகள் எஞ்சிய நிலையில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் லக்னோ அணி பேட்டிங் ஆடவில்லை என்றால் சென்னைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. ஏற்கனவே மழை பெய்த நிலையில் தான் போட்டி 15 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. அதன்படி, கேஎல் ராகுல் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக மனன் வோஹ்ரா களமிறங்கினார். முதலில் தீபக் சகார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் முதல் 3 ஓவர்களை வீசினர். ஆனால், அதில் விக்கெட் விழாத நிலையில் பவுண்டரி தான் அதிகம் அடிக்கபட்டது. இதையடுத்து ஸ்பின்னர்களை தோனி அழைத்தார்.
விட்டு விட்டு மழை: போட்டி நிறுத்தம்; சென்னை பேட்டிங் ஆடுமா?
முதலில் மொயீன் அலி பந்து வீசினார். அவரது 3.4ஆவது ஓவரில் கைல் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மகீஷ் தீக்ஷனா வரவழைக்கப்பட்டார். அவர் வீசிய 5.4ஆவது ஓவரில் தொடக்க வீரர் மனன் வோஹ்ரா கிளீன் போல்டானார். இவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து லக்னோ அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா களமிறங்கினார். இவர், வந்த வேகத்தில் கோல்டன் டக் முறையில் தீக்ஷனா பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த அஜிங்கியா ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஓ, இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு பண்ணிட்டீங்களா? தோனி கேள்வி!
அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை வியக்க வைத்தது. அடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தனது அதிரடியை காட்டிய பதோனி 4 சிக்ஸர்கள் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தற்போது 19.2 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதையடுத்து மீண்டும் போட்டி தொடங்க இருந்த நிலையில், மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதில், 4 பந்துகள் எஞ்சிய நிலையில் மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் லக்னோ அணி பேட்டிங் செய்யவில்லை என்றால் சென்னை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் சென்னை அணி 42 ரன்கள் எடுக்க வேண்டும். 10 ஓவர்களாக இருந்தால் 76 ரன்கள் என்றும், 12 ஓவர்களாக இருந்தால் 89 ரன்கள் என்றும் 15 ஓவர்களாக இருந்தால் 106 ரன்கள் என்றும், 17ஆக இருந்தால் 117 ரன்கள் என்றும், 19 ஓவர்களாக குறைக்கப்பட்டால் சென்னை அணிக்கு 127 ரன்கள் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் மழை பெய்து வரும் நிலையில் போட்டி எத்தனை ஓவர்களாக குறைக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கவில்லை.
தந்தையின் நினைவாக புதிய பள்ளிக்கூடம்: 2300 குழந்தைகளுக்கு இலவச கல்வி
If LSG don't bat again, CSK's target will be:
5 overs - 42.
10 overs - 76.
15 overs - 106.
18 overs - 122.
19 overs - 127.