TNPL 2022: எளிய இலக்கையே அடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்த திருச்சி வாரியர்ஸ்..! மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி

Published : Jul 24, 2022, 07:26 PM IST
TNPL 2022: எளிய இலக்கையே அடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்த திருச்சி வாரியர்ஸ்..! மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி

சுருக்கம்

137 ரன்கள் என்ற எளிய இலக்கை அடிக்கவிடாமல் 100 ரன்களுக்கு திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸும் ரூபி திருச்சி வாரியர்ஸும் மோதின.

சேலத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

அமித் சாத்விக், சந்தோஷ் ஷிவ், ஆதீக் உர் ரஹ்மான், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (விக்கெட்கீப்பர்), சுகேந்திரன், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, அஜய் கிருஷ்ணா, எம்.ஏ.சஞ்சய், மதிவாணன்.

இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்

மதுரை பாந்தர்ஸ் அணி:

அருண் கார்த்திக், வி ஆதித்யா, பாலசந்தர் அனிருத், சதுர்வேத் (கேப்டன்), ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), ஜெகதீசன் கௌசிக், சன்னி சந்து, பி சரவணன், கிரன் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி, ஆர் மிதுன்.

முதலில் பேட்டிங் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள் மிக சுமாராக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான அருண் கார்த்திக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஆதித்யா 34 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். பால்சந்தர் அனிருத் அதிரடியாக ஆடி26 பந்தில் 34 ரன்கள் அடித்தார்.

கௌசிக் 25 பந்தில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். அனைத்து வீரர்களுமே மந்தமாக பேட்டிங் ஆடியதால் மதுரை பாந்தர்ஸ் அணியின் ஸ்கோர் உயரவே இல்லை. 7ம் வரிசையில் இறங்கிய சன்னி சந்து 8 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும்  3 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 136 ரன்கள் அடித்த மதுரை பாந்தர்ஸ் அணி, 137 ரன்கள் என்ற இலக்கை திருச்சி வாரியர்ஸூக்கு நிர்ணயித்தது.

இதையும் படிங்க - அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வு..? பாண்டியாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ரவி சாஸ்திரி

137 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாத்விக் (23) மற்றும் சந்தோஷ் ஷிவ் (31) ஆகிய இருவரும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். திருச்சி அணி விரட்டிய இலக்கிற்கு அவர்கள் அமைத்து கொடுத்தது நல்ல தொடக்கமே. 

ஆனால் அதன்பின்னர் ஒரு வீரர் கூட சரியாக ஆடாததால் 18.4 ஓவரில் வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது திருச்சி அணி. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜெகதீசன் கௌசிக் 4 விக்கெட் வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் கிரன் ஆகாஷ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 36 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?