
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட்டில் நடக்கிறது.
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸும் களமிறங்கியுள்ளன.
இதையும் படிங்க - இதுதான் என்னோட லட்சியம்.. இந்திய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருக்கேன் - விராட் கோலி
2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ்பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கானுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் அறிமுக போட்டி.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
இதையும் படிங்க - நல்ல பிளேயர் தான்.. ஆனால் பாவம் அவரு ஒருவரின் இடம் தான் இந்திய அணியில் டேஞ்சரா இருக்கு.! அஜித் அகார்கர் அதிரடி
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, அல்ஸாரி ஜோசஃப், ஜெய்டன் சீல்ஸ், ஹைடன் வால்ஷ்.