க்ருணல் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது..!

Published : Jul 24, 2022, 06:18 PM ISTUpdated : Jul 24, 2022, 06:26 PM IST
க்ருணல் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது..!

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணல் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.   

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணல் பாண்டியா. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரரான க்ருணல் பாண்டியாவும் ஆல்ரவுண்டரே. ஸ்பின் ஆல்ரவுண்டரான க்ருணல் பாண்டியா இந்தியாவிற்காக 5 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஐபிஎல்லில் 98 போட்டிகளில் ஆடி 1326 ரன்களை குவித்துள்ள க்ருணல் பாண்டியா, 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்த க்ருணல் பாண்டியா, கடந்த சீசனில் மும்பை அணியால் விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடினார்.

இதையும் படிங்க - இதுதான் என்னோட லட்சியம்.. இந்திய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருக்கேன் - விராட் கோலி

கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்காக ஆடிய க்ருணல் பாண்டியா, அதன்பின்னர் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடவில்லை.

இதையும் படிங்க - WI vs IND: தம்பி நீங்க கிளம்புங்க.. 2வது ODI-க்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! இளம் வீரர் அறிமுகம்

இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. க்ருணல் பாண்டியா - பன்குரி ஷர்மா ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை க்ருணல் பாண்டியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?