டிஎன்பிஎல் தொடரின் 8ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று இரவு 7.15 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 7 சீசன்களில் முறையே லைகா கோவை கிங்ஸ் 2 முறை டிராபி வென்றுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணி ஒரு முறை டிராபியை வென்றிருக்கிறது. இந்த நிலையில் தான் 8ஆவது சீசனில் 3ஆவது முறையாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அதே போன்று, லைகா கோவை கிங்ஸ் அணியும் 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கடந்த ஜூலை 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் இடம் பெற்று விளையாடிய 8 அணிகளில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இரவு 7.15 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
இதுவரையில் இரு அணிகளும் 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 5 போட்டிகளில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிராபியை வென்றுள்ளது. அதோடு, 3 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணியும் டிராபியை வென்றுள்ளது. இந்த சீசனில் லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 7 லீக் போட்டிகளில் 6ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்திருந்தது. அதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடிய 7 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்திருந்தது.
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால் அனைவருக்கும் இலவச விசா – அட்லிஸின் நிறுவனர் மோஹக் நஹ்தா உறுதி!
இதையடுத்து பிளே ஆஃப் சுற்றில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. இதே போன்று எலிமினேட்டரில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடியது. இதில், வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.