முகமது சிராஜ் மற்றும் நிகத் ஜரீனுக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்கும் மசோதா நிறைவேற்றம்!

By Rsiva kumar  |  First Published Aug 3, 2024, 9:27 PM IST

ஹைதராபாத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம், இந்திய அணி வீரர் முகமது சிராஜ் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனையான நிகத் ஜரீன் ஆகியோருக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்க தெலங்கானா சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா வில்வித்தை, நீச்சல், டென்னிஸ், ரோவிங், குதிரையேற்றம், ஜூடோ ஆகிய போட்டிகளில் பதக்கமே இல்லாமல் வெளியேறியது. துப்பாக்கி சுடுதலும் கிட்டத்தட்ட முடிந்துள்ளது.

கடைசியாக தீபிகா குமாரியும் தோல்வி – ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறிய 6 வில்வித்தை வீரர், வீராங்கனைகள்!

Latest Videos

undefined

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. பேட்மிண்டன் போட்டியும் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்த தொடரில் குத்துச்சண்டை வீராங்கனையான நிகத் ஜரீன் 16ஆவது சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் தான் நிகத் ஜரீனுக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்கும் மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜரீனுக்கு மட்டுமின்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிற்கும் இந்த பதவி வழங்கப்பட உள்ளது. அதோடு ஹைதராபாத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானமும் அமைக்கப்பட உள்ளதாக தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐயிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர் - மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 4ஆவது இடம்!

மேலும், ஸ்டேடியம் அமைப்பதற்கான தேவையான நிலம் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அருகில் கையகப்படுத்தும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்திலுள்ள கந்துகுர் மண்டலத்திலுள்ள பெகரிகன்சா பகுதியில் தான் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய உள்ளது.

இது குறித்து சட்டசபையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பதாவது: கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் விளையாட்டு கொள்கைகள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் என்றும், அதன் பின்னர், டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி சிராஜ் மற்றும் ஜரீனுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Paris 2024 Olympics: ஒலிம்பிக் கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை வழங்கிய இந்திய தூதரகம்!

click me!