அதிரடியாக விளையாடிய அஸ்வின் – 10.5 ஓவரில் 112 ரன்கள் எடுத்து திண்டுக்கல் வெற்றி – இறுதிப் போட்டியில் டிராகன்ஸ்

By Rsiva kumar  |  First Published Aug 3, 2024, 6:11 AM IST

டிஎன்பிஎல் தொடரில் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. இதில், லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் என்று மொத்தமாக 8 அணிகள் பங்கேற்று விளையாடின. சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் இந்த தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரில், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் என்று 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் ஓவர் இல்லை - டிராவில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி – ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

Tap to resize

Latest Videos

இதில், முதல் தகுதி சுற்று போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில், லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடின, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெண்கலப் பதக்க போட்டி: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத் ஜோடி தோல்வி!

இதில், முன்வரிசை வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மான் பாஃப்னா அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் திண்டுக்கல் அணியில் பி விக்னேஷ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சுபோத் பதி மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 2 விக்கெட்டுக கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி - ஹாக்கி ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு சென்ற இந்தியா!

விமல் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில், விமல் குமார் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அஸ்வின் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். வரும் 4ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

click me!