இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 168 போட்டிகளில் இந்தியா 99 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கை 57 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 11 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
இதுவே இந்தியா ஹோம் மைதானத்தில் 40 போட்டியிலும், அவேயில் 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஃபெர்னாண்டோ ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
Paris 2024 Olympics: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா – அங்கீதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!
அதன் பிறகு வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்களில் ஷிவம் துபே பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீரா சமரவிக்ரமா 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சரித் அசலங்கா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படி வரிசையாக இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், தொடக்க வீரர் பதும் நிசாங்கா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்துக் கொடுத்தார். கடைசியில் அவர், 9 பவுண்டரி உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜனித் லியானகே 20 ரன்னில் ஆட்டமிழக்க, வணிந்து ஹசரங்கா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அகிலா தனன் ஜெயா 17 ரன்கள் சேத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை நின்னு நிதானமாக விளையாடிய துணித் வெல்லாலகே 65 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் மூலமாக இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
ஷிவம் துபே, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைக்கும்.