இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியானது டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது தொடங்கியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணியில் ரிஷப் பண்ட் எடுக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றார். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெற்றுள்ளார். குல்தீப் யாதவ்விற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியாக இருந்தும் சாதனை படைத்த 10 பெண்கள்!
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, அவிஸ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, வணிந்து ஹசரங்கா, துணித் வெல்லலகே, அகிலா தனன்ஜெயா, அசித் ஃபெர்னாண்டோ, முகமது சிராஸ்.
Paris 2024 Olympics: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா – அங்கீதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!