இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்தது போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் காம்போவில் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 39 ரன்கள் எடுக்க, ரியான் பராக் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களும் எடுத்தனர்.
சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி – 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாம்பியன்!
undefined
பின்னர், 138 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மட்டும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். அவர்களில் பதும் நிசாங்கா 26, குசால் மெண்டிஸ் 43 ரன்கள், குசால் ஃபெரேரா 46 ரன்கள் எடுத்தனர். இவர்கள் மூவரும் இணைந்து 115 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய 22 ரன்களுக்கு இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒட்டுமொத்தமாக 4.2 ஓவர்களில் இலங்கை கடைசியில் 22 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
இதில், போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய ரிங்கு சிங் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவையிருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் பந்து வீசினார். அந்த ஓவரில் அவர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை தவறவிட்டார். இந்த 2 ஓவர்கள் தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இறுதியாக இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுக்கவே போட்டியானது டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில், வாஷிங்டன் சுந்த 2 விக்கெட் எடுக்கவே இலங்கை 2 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றியுள்ளது. மேலும், 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
வில்வித்தையில் அங்கீதா பகத் அதிர்ச்சி தோல்வி – பஜன் கவுர் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!
முதல் முறையாக இந்தியா 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போதிலும் டி20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இருவருமே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் சமன் செய்யப்பட்ட போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 4 சூப்பர் ஓவர் மற்றும் ஒரு போட்டி பவுல் அவுட் ஆகும்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய பவுலர்கள் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக பந்து வீசவே சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றியை ருசித்தது.