இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது அன்பு மகன் 4ஆவது வயதை எட்டிய நிலையில் அவரை குற்றத்தில் என்னுடைய பார்ட்னர் என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியானது டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இடம் பெற்று பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்ததில் பாண்டியாவின் பங்கு அதிக முக்கியத்துவம் பெற்றது. இதையடுத்து வான்கடே மைதானத்தில் அவரை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரோகித் சர்மாவும் அவரை புகழ்ந்து பேசினார். இந்த நிலையில் தான் இந்திய அணி டிராபி வென்றதைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இருவரும் ஒன்றாக இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
கடைசியில் பிரிவு ஒன்றே சிறந்த முடிவு என்று நம்புகிறோம். இது எங்களுக்கு கடினமான ஒன்று. இந்த 4 ஆண்டுகளில் எங்கள் இருவருக்கும் இடையிலிருந்த மகிழ்ச்சி, மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களது வாழ்க்கையில் அகஸ்தியா முக்கிய அங்கமாக இருப்பார். அவரது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த கடினாமான சூழலில் எங்களது தனி உரிமையை மதித்து, ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
Paris Olympics 2024, Archery: காலிறுதியில் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி அதிர்ச்சி தோல்வி!
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா இன்று தனது 4ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பாண்டியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாள்தோறும் என்னை தொடர வைக்கிறாய். குற்றத்தில் என் பார்ட்னருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் முழு இதயம், என் அகு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உன்னை நான் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா பகிர்ந்த வீடியோவில் மகனுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Paris Olympics 2024: இது எனக்கான நாள் இல்லை – 4ஆவது இடம் பிடித்து வெளியேறிய அர்ஜூன் பாபுதா!