புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அன்சுமான் கெய்க்வாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1985 ரன்களும், 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ரன்களும் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார்.
இது தவிர 1990 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது வழிகாட்டுதலில் இந்திய அணி கோகோ கோலா டிராபியை கைப்பற்றியிருக்கிறது. மேலும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ நிர்வாகத்தில் பொறுப்பு வகித்துள்ளார். 71 வயதாகும் அன்ஷுமான் கெய்க்வாட் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். இதன் காரணமாக லண்டனில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொருளாதார பிரச்சனை காரணமாக வதோரதரா கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தான இந்திய ஜாம்பவான் கபில் தேவ் தனது கிரிக்கெட் நண்பர்கள் மற்றும் பிசிசிஐயிடம் அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அன்ஷுமான் கெய்க்வாட்டின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் சிகிச்சை பலனின்றி கெய்க்வாட் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சீனியர் வீரர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.
வில்வித்தையில் அங்கீதா பகத் அதிர்ச்சி தோல்வி – பஜன் கவுர் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!