நெதர்லாந்து கூட 410 அடிப்பது முக்கியமல்ல, நியூசிலாந்து கூட அடிக்கணும் அதுதான் முக்கியம் – ரசிகர்கள் குமுறல்!

By Rsiva kumar  |  First Published Nov 14, 2023, 7:05 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், நெதர்லாந்து கூட 410 ரன்கள் அடித்தது முக்கியமல்ல, நியூசிலாந்து அணியுடன் ஜெயிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.  It doesnt matter if Netherlands score 410, its important that New Zealand score too – fans roar!


இந்தியாவில் நடந்து வந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் எந்த அண் சாம்பியானாகும் என்பது இன்னும் 5 நாட்களில் தெரிந்துவிடும். நாளை நடக்கும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நினைத்தால் அது நடக்காது – அப்துல் ரசாக்!

Tap to resize

Latest Videos

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இல்லையென்றால், கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போன்று பரிதாபமாக வெளியேறும். கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா விளையாடிய 9 போட்டிகளில் 7ல் வெற்றியும், ஒரு தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படாத நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

நியூசிலாந்து விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்த நிலையில் ஒரு போட்டியில் முடிவு எட்டப்படாத நிலையில், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது. இதையடுத்து இரு அணிகளும் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதின. இதில், நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் குவித்தது. பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!

பின்னர் விளையாடிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 3 வீரர்களும் தலா 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து, 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியானது 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசியாக எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?

ரவீந்திர ஜடேஜாவும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக 2 ரன்கள் ஓட முயற்சித்த தோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கடைசியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில், தான் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடக்க இருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கடைசியாக நடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 250 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனிக்காக, ரோகித் சர்மா இதனை செய்ய வேண்டும் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

நெதர்லாந்து அணிக்கு எதிராக 410 ரன்கள் அடிப்பது முக்கியமல்ல. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்து வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

click me!