விராட் கோலியை மட்டுமே ஃபோகஸ் செய்ய கூடாது; ஒட்டுமொத்த அணியையும் ஃபோகஸ் செய்ய வேண்டும் – காம்பீர்!

Published : Nov 14, 2023, 05:57 PM IST
விராட் கோலியை மட்டுமே ஃபோகஸ் செய்ய கூடாது; ஒட்டுமொத்த அணியையும் ஃபோகஸ் செய்ய வேண்டும் – காம்பீர்!

சுருக்கம்

விராட் கோலி மீது மட்டுமே கவனம் செலுத்துவதாக ஒளிபரப்பு நிறுவனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், ஒளிபரப்பு நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார்.

தோனிக்காக, ரோகித் சர்மா இதனை செய்ய வேண்டும் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் ஐம்பது அடித்தால், நான் ஐம்பது அடித்தேன். ஒளிபரப்பாளர் என்னை மட்டுமே ஃபோகஸ் செய்து காட்டுகிறார். இதனால், மற்ற வீரர் குறைவாக மதிப்பிடப்பட்ட வீரர் என்று அழைக்கப்படுவார். ஒரு வீரரை குறைத்து மதிப்பிடுவது யார்? ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் தான் இதனை செய்கிறார்கள். நீண்ட காலமாக ஐசிசி போட்டிகளில் வெற்றி வாகை சூடவில்லை. ஏனென்றால், ஒட்டு மொத்த அணியை ஃபோகஸ் செய்யாமல் தனிப்பட்ட ஒரு வீரரையும், அவரது சாதனையையும் மட்டுமே ஒளிபரப்பாளர்கள் ஃபோகஸ் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?

இதனை அவர் உணரவும் செய்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் காம்பீர் 122 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், தோனி 79 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியனானது.

இந்தப் போட்டியில் தோனியை மட்டுமே ஒவ்வொருவரும் பேசினர். ஆனால், அதற்கு அஸ்திவாரம் போட்ட கவ்தம் காம்பீர் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுகள் வரையில் இந்திய அணி வரிசையாக 9 ஐசிசி தொடர்களில் தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நினைத்தால் அது நடக்காது – அப்துல் ரசாக்!

இவ்வளவு ஏன், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடந்து முடிந்த 9 லீக் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு கோலியும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதில், ரோகித் சர்மா, முகமது சிராஜ், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரது பங்களிப்பும் இருந்துள்ளது. ஆனாலும், விராட் கோலியை மட்டுமே ரசிகர்கள் முதல் ஒளிபரப்பாளர்கள் வரை அனைவரும் ஃபோகஸ் செய்கின்றனர் என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!