அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 2 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டப்ளின் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி அயர்லாந்து அணி பேட்டிங் ஆடியது. அந்த அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. கடைசியாக, கர்டிஸ் கேம்பர் 39 ரன்களும், பேரி மெக்கார்த்தி 51 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
IRE vs IND 1st T20: அயர்லாந்தை தட்டி தூக்கிய இந்தியா; கடைசில வான வேடிக்கை காட்டிய மெக்கர்த்தி!
இறுதியாக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 46 ரன்கள் எடுத்தது.
Ireland vs India 1st T20: முதல் ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்த பூம் பூம் பும்ரா!
ஜெய்ஸ்வால் இறங்கி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வாழ்வா சாவா கட்டத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர் 1 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு இருந்தது. தொடர்ந்து மழை பெய்த நிலையில், டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அயர்லாந்து அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், இந்தியாவோ 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலமாக இந்தியா 2 ரன்களில் வெற்றி பெற்றது. அதோடு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
Gautam Gambhir: 2024 ஐபிஎல்லுக்கு முன்னதாக லக்னோ அணியை விட்டு விலக தயாரான கௌதம் காம்பீர்!