அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் ஓவரின் 2ஆவது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது டப்ளின் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இந்தப் போட்டியின் மூலமாக ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அறிமுகமாகின்றனர்.
இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பல்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். அதன்படி பல்பிர்னி பேட்டிங் ஆடினார். முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அவர், 2ஆவது பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக பும்ரா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு அணிக்கு திரும்ப வந்து தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதுமட்டுன்றி, போட்டியின் 5ஆவது பந்திலும் லோர்கன் டக்கரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோர்கன் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்தார். இதன் மூலமாக முதல் ஓவரிலே பும்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.
Gautam Gambhir: 2024 ஐபிஎல்லுக்கு முன்னதாக லக்னோ அணியை விட்டு விலக தயாரான கௌதம் காம்பீர்!
Bumrah in his first over:
4, W, 0, 0, W, 0
Best in the business forever in India. pic.twitter.com/6vcp9TAhsO
இந்தியா:
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னாய்.
அயர்லாந்து:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பல்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.