இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியில் முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிரின் இருவரும் களமிறங்கினர்.
Ireland vs India 1st T20: முதல் ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்த பூம் பூம் பும்ரா!
முதல் ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 2ஆவது பந்தில் பால்பிரின் கிளீன் போல்டானார். அதே ஓவரில் 5ஆவது பந்தில் லோர்கன் டக்கர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹேரி டெக்டர் 9 ரன்களில் பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் பால் ஸ்டிர்லிங் 11 ரன்கள் எடுத்திருந்த போது, ரவி பிஷ்னாய் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து ஜார்ஜ் டக்ரெல் ஒரு ரன்னில் பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் அயர்லாந்து அணி 100 ரன்கள் எடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால், 10.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய அயர்லாந்து அணியில் கார்டிஸ் கேம்பர் 39 ரன்களில் ஆட்டமிழக்க, பேரி மெக்கர்த்தி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Gautam Gambhir: 2024 ஐபிஎல்லுக்கு முன்னதாக லக்னோ அணியை விட்டு விலக தயாரான கௌதம் காம்பீர்!
இறுதியாக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பந்து வீச்சு தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.