இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூலை 16 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியாவோ 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
இதையடுத்து 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில் இந்தியா 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2023-25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில், 9 அணிகள் இடம் பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரில் பங்கேற்கின்றன. இதில் 3 ஹோம் மற்றும் 3 அவே டெஸ்ட் தொடர்கள் என்று 6 தொடர்கள் நடத்தப்படும். ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.
இதில், மொத்தமாக 27 தொடர்கள் மற்றும் 68 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து 3ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆஷஸ் தொடர் மூலமாக ஆரம்பமாகிறது. இந்த 3ஆவது சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூன் 2025 ஆம் ஆண்டு முடிவடைகிறது.
இதே போன்று இந்தியாவிற்கும் வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
TNPL 2023: முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் பலப்பரீட்சை!
2ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையில் ஒரு நாள் போட்டியும், 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் டி20 போட்டியும் நடக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India tour of West Indies 2023:
1st Test - July 12 to 16
2nd Test - July 20 to 24
1st ODI - July 27
2nd ODI - July 29
3rd ODI - Aug 1
1st T20 - Aug 3
2nd T20 - Aug 6
3rd T20 - Aug 8
4th T20 - Aug 12
5th T20 - Aug 13 pic.twitter.com/vgUYVQ61zv