WI vs IND 5th T20: விட்டு விட்டு மழை; ஆறுதல் அளித்த சூர்யகுமார் யாதவ் – 165 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா!

By Rsiva kumar  |  First Published Aug 13, 2023, 10:17 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு 2-1 என்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதலில் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

WI vs IND 5th Test: இந்தியா பேட்டிங்: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தான் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். நேற்றைய போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓபெட் மெக்காய்க்கு பதிலாக அல்சாரி ஜோசஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

WI vs IND 5th T20 Match: டி20 தொடர் யாருக்கு? இந்தியாவா? வெஸ்ட் இண்டீஸா?

வெஸ்ட் இண்டீஸ்:

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்டு, ஓடியன் ஸ்மித், அகீல் ஹூசைன், அல்சார் ஜோசஃப்.

இந்தியா:

யஷஸ்வி ஜெஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சகால், முகேஷ் குமார்.

எல்இடி ஸ்டெம்புகள் விலை தெரியுமா? 10க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலையை விட அதிகமா?

டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5) மற்றும் சுப்மன் கில் (9) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தனர்.  திலக் வர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஸ்பின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே தோல்விக்கு காரணம் – ரோவ்மன் பவல்!

இதையடுத்து வந்த சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் தவறவிட்டு வருகிறார். கடந்த போட்டியில் களமிறங்காத சாம்சன், இந்தப் போட்டியில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 14 ரன்களில் வெளியேறினார். அக்‌ஷர் படேல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் சிக்ஸர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் கிளீன் போல்டானார். குல்தீப் யாதவ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். கடைசியாக அக்‌ஷர் படேல் 13 ரன்களில் ஆட்டமிழக்க, முகேஷ் குமார் பவுண்டரி அடித்ததன் மூலமாக இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது.

போட்டியின் 15.5 ஆவது ஓவரின் போது மழை குறுக்கீடு இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. இதே போன்று போட்டியின் 19. 4ஆவது ஓவரில் மழை குறுக்கீடு இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இறுதியாக இந்தியா 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹாக்கி டிராபியை வென்று கொடுத்த இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு!

பந்து வீச்சு தரப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரொமரியோ ஷெப்பர்டு 4 விக்கெட் கைப்பற்றினார். அகில் ஹூசைன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

click me!