ஒரு நாள் போட்டியில் சாதித்து காட்டிய இந்தியா! 317 ரன்கள் வித்தியாசம் - இதுவே முதல் முறை!

Published : Jan 16, 2023, 01:38 PM IST
ஒரு நாள் போட்டியில் சாதித்து காட்டிய இந்தியா! 317 ரன்கள் வித்தியாசம் - இதுவே முதல் முறை!

சுருக்கம்

ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.  

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

டான் பிராட்மேனுக்கு நிகரான சாதனைக்கு சொந்தக்காரர் சர்ஃபராஸ் கான்! இந்தியஅணி நிர்வாகத்தை விளாசிய முன்னாள் வீரர்

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 390 ரன்கள் எடுத்தது. இதில், ரோகித் சர்மா  42, சுப்மன் கில் 116, ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 8 சிக்சர்கள் 13 பவுண்டரிகள் உள்பட 166 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். பந்து வீச்சு தரப்பில் ரஜிதா, லகிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கருணாரத்னே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு ஆரம்பமே சறுக்கல் தான். அந்த அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ (1), நுவானிடு பெர்னாண்டோ (19), குசல் மெண்டிஸ் (4), சரித் அசலங்கா (1), தசுன் ஷனாகா (11), வணிந்து ஹசரங்கா (1), சமிகா கருணாரத்னே (1) என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். 9.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்த இலங்கை அணி 15.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியாக வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியாற இலங்கை அணி 22 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்து 317 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா

இந்த நிலையில், ஒரு அணி அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். அதாவது, ஒரு நாள் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இலங்கைக்கு எதிரான இந்த 3ஆவது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் குவித்த இந்திய அணி அதிகபட்சமாக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

Hockey World Cup 2023: இந்தியா - இங்கிலாந்து போட்டி டிரா..! புள்ளி பட்டியல் அப்டேட்

இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 272 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 258 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?