ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு

By karthikeyan V  |  First Published Jan 15, 2023, 10:18 PM IST

ஜனவரி 15ம் தேதியான இன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்து 166 ரன்களை குவித்து சாதனை படைத்த விராட் கோலி, இதற்கு முன் இதே ஜனவரி 15ம் தேதிகளில் அடித்த சதங்களின் பட்டியலை பார்ப்போம்.
 


சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019 இறுதியிலிருந்து 2022 செப்டம்பர் வரையிலான 3 ஆண்டுகள் ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவந்தார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து மீண்டும் தனது சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து கடந்த ஆண்டை சதத்துடன் முடித்தார்.

அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து 2023ம் ஆண்டை சதத்துடன் தொடங்கிய கோலி, இன்று (ஜனவரி 15) இலங்கைக்கு எதிராக நடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 166 ரன்களை குவித்தார். அவரது அபாரமான சதத்தால் 50 ஓவரில் 390 ரன்களை குவித்த இந்திய அணி, இலங்கையை 73 ரன்களுக்கு சுருட்டி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tap to resize

Latest Videos

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா

ஜனவரி 15ம் தேதியான இன்று விராட் கோலி பெரிய சதமடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது விராட் கோலியின் 46வது சதம். சர்வதேச கிரிக்கெட்டில் 74வது சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 4 சதங்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துவிடுவார்.

ஜனவரி 15ம் தேதியான இன்று சதமடித்த கோலி, இதற்குமுன் 3 முறை இதே ஜனவரி 15ம் தேதி சதமடித்திருக்கிறார். ஜனவரி 15 என்றாலே கோலிக்கு மிகவும் பிடித்தமான, அதிர்ஷ்டமான நாளாகிவிட்டது. 2017, 2018 மற்றும் 2019 ஆகிய 3 ஆண்டுகளும் தொடர்ச்சியாக ஜனவரி 15ல் சதமடித்து அசத்தினார் கோலி. இடையில் ஃபார்மில் இல்லாத 3 ஆண்டுகள் மட்டுமே ஜனவரி 15ல் அவர் சதமடிக்கவில்லை.

இலங்கைக்கு எதிராக சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சாதனைகளை காலி செய்த கோலி.! சாதனை நாயகன் கிங் கோலி

2017 ஜனவரி 15ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 122 ரன்களும், 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் 153 ரன்களும் குவித்திருந்தார். 2019 ஜனவரி 15ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 104 ரன்களை குவித்தார். அதற்கடுத்து இன்று இலங்கைக்கு எதிராக 4வது முறையாக ஜனவரி 15ல் சதமடித்துள்ளார்.
 

click me!