SA20: வெறும் 19 பந்தில் அரைசதம்; கிளாசன் காட்டடி ஃபினிஷிங்! பார்ல் ராயல்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த டர்பன்

By karthikeyan VFirst Published Jan 15, 2023, 7:09 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 216 ரன்களை குவித்து, 217 ரன்கள் என்ற கடினமான இலக்கை பார்ல் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டர்பனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டர்பன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கைல் மேயர்ஸ், குயிண்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசன், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிரிட்டோரியஸ், கீமோ பால், கேஷவ் மஹராஜ், சைமன் ஹார்மெர், ரீஸ் டாப்ளி, பிரெனெலான் சுப்ராயென்.

இலங்கைக்கு எதிராக சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சாதனைகளை காலி செய்த கோலி.! சாதனை நாயகன் கிங் கோலி

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), விஹான் லுப்பே, டேன் விலாஸ், டேவிட் மில்லர் (கேப்டன்), இயன் மோர்கன், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இவான் ஜோன்ஸ், இம்ரான் மனாக், ஃபார்ச்சூன், லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் மற்றும் முல்டர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 62 ரன்கள் அடித்தனர். மேயர்ஸ் 23 பந்தில் 39 ரன்களும், முல்டர் 33 பந்தில் 42 ரன்களும் அடித்தனர். கேப்டன் டி காக் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்தார். 

IND vs SL: விராட் கோலி மெகா சதம்; ஷுப்மன் கில் 2வது சதம்..! 50 ஓவரில் 390 ரன்களை குவித்தது இந்திய அணி

அதன்பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன், 19 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்து அபாரமாக இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 216 ரன்களை குவித்த டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 217 ரன்கள் என்ற கடின இலக்கை பார்ல் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!