டான் பிராட்மேனுக்கு நிகரான சாதனைக்கு சொந்தக்காரர் சர்ஃபராஸ் கான்! இந்தியஅணி நிர்வாகத்தை விளாசிய முன்னாள் வீரர்

By karthikeyan V  |  First Published Jan 15, 2023, 11:00 PM IST

முதல் தர கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு நிகரான சராசரியை பெற்றிருக்கும் சர்ஃபராஸ் கானை, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 


இந்தியாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களையும் இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அடங்கிய நீண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

Tap to resize

Latest Videos

ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அனியில் ராகுல், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் ஆடமுடியாததால், கேஎஸ் பரத் முதன்மை விக்கெட் கீப்பராகவும், 2வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.  ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கத் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். சூர்யகுமார் யாதவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

டெஸ்ட் அணி தேர்வு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் வீரர்கள் ஆடுவதன் அடிப்படையில் அமையவேண்டும். அப்படி பார்க்கப்போனால் ரஞ்சி தொடரில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி இரட்டை சதம், முச்சதம் என பெரிய ஸ்கோர்களை அடித்து மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் எடுக்கப்படவில்லை. 

சர்ஃபராஸ் கான் 34 ரஞ்சி போட்டிகளில் ஆடி 11 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களுடன் 3175 ரன்களை குவித்துள்ளார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்த சர்ஃபராஸ் கான், நடப்பு சீசனில் இதுவரை 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 431 ரன்களை குவித்துள்ளார்.

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை ரஞ்சி தொடரில் வெளிப்படுத்தியும், இந்திய டெஸ்ட் அணியில் இடமிருந்தும் கூட, அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இர்ஃபான் பதான், ஆகாஷ் சோப்ரா ஆகிய முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, சர்ஃபராஸ் கான் கண்டிப்பாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். சூர்யகுமார் யாதவை எடுக்கிறார்கள் என்றால், அணியில் இடம் இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி இடம் இருக்கும்பட்சத்தில், சர்ஃபராஸ் கானைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். முதல் தர கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு அடுத்து 80 ரன்கள் என்ற சராசரியை பெற்றிருக்கும் சர்ஃபராஸ் கானை புறக்கணித்தது சரியல்ல என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!