ஒரு போட்டியில் மட்டும் ஜெயிச்சிட்டால் திரும்ப வந்திருவோம் – உண்மையான ரோகித் சர்மாவின் வாக்கு!

By Rsiva kumar  |  First Published May 22, 2023, 5:21 PM IST

தொடர்ந்து 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த நிலையில் ஒரு போட்டியில் ஜெயிச்சிட்டால் மீண்டு வருவோம் என்று கூறியிருந்த ரோகித் சர்மாவின் வாக்கு தற்போது உண்மையாகியுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன.

IPL 2023: மிடில் ஆர்டர் சரியில்லை; ஒரு போட்டியில் ஜெயித்தால் மீண்டு வருவோம்: ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

இதில், ஆரம்பத்தில் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் 3ஆவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 22ஆவது போட்டியில் முதன் முதலாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஒரு போட்டியில் ஜெயித்துவிட்டால் மீண்டு வருவோம் என்று கூறியிருந்தார்.

ஆர்சிபி தோல்விக்கு யார் காரணம்? ஃபாப் டூப்ளெசிஸ் ஓபன் டாக்!

அவர் சொன்னபடியே 14 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று நடந்த 69ஆவது போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 200 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தோனிக்கு சேப்பாக்கம் மாதிரியை பரிசளித்த ரசிகர்கள்: லைட்டில் ஜொலிக்கும் Chepauk Stadium Miniature!

இந்த வெற்றியின் மூலமாக 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றில் இடம் பிடித்தது. ஆனால், மற்றொரு சிக்கல் இருந்தது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மும்பையின் பிளே ஆஃப் கனவி பறிபோயிருக்கும். ஆனால், கடைசியாக நடந்த லீக் போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஆர்சிபி தோல்வி அடைந்து வெளியேறியதால் மும்பைக்கு பிளே ஆஃப் உறுதி செய்யப்பட்டதை ரோகித் சர்மா அண்ட் டீம் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

முழங்காலில் காயமடைந்த விராட் கோலி: இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 போட்டிகளில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்தது. அடுத்த 7 போட்டிகளில் 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 24 ஆம் தேதி எலிமினேட்டர் சுற்று நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரக்தியடைந்த ஆர்சிபி ரசிகர்கள்: சுப்மன் கில்லிற்கு கொலை மிரட்டல், மரணத்திற்கு வாழ்த்து!

 

Rohit Sharma's Happiness & celebration when Mumbai qualified into Play-offs. pic.twitter.com/JzcwT6DkKs

— Johns. (@CricCrazyJohns)

 

click me!