லக்னோவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் 103 ரன்களுக்கு மேல் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தாவிற்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஐபிஎல் 16ஆவது சீசனில் இடம் பெற்ற 10 அணிகளில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!
குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல சென்னை, லக்னோ, பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான 67ஆவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில், கொல்கத்தா 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், இந்த தொடரிலிருந்து வெளியேறும்.
பஞ்சாப்பை துரத்தியடித்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
மாறாக 12 புள்ளிகளுடன் -0.256 என்ற ரன்ரேட் உள்ள நிலையில், இன்று நடக்கும் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும். இல்லையென்றால் 4ஆவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து இந்த சீசனிலிருந்து வெளியேறும். அதோடு, லக்னோ வெற்றி பெற்றால் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.
WTC Final - 3 பேட்ஜாக லண்டன் புறப்படும் டீம் இந்தியா!
கொல்கத்தாவில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை நீடித்து போட்டி ரத்து செய்யப்பட்டல் அது லக்னோவிற்கு சாதகமாக அமையும். 15 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கும் லக்னோ கூடுதலாக ஒரு புள்ளி பெற்று 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறும். டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோற்றாலும், ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் தோல்வி அடைந்தால், லக்னோவின் 2ஆவது இடம் உறுதி செய்யப்படும்.
சென்னைக்கு எதிராக ஜெர்சியை மாற்றி விளையாடும் டெல்லி: ரெயின்போ ஜெர்சி ராசி!