TNPL 2023: முதல் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பவுலிங்!

Published : Jun 12, 2023, 07:30 PM IST
TNPL 2023: முதல் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பவுலிங்!

சுருக்கம்

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசனுக்கான முதல் போட்டியில் டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்கியது. இம்பேக்ட் பிளேயர் மற்றும் டிஆர்எஸ் என்று புதிய விதிமுறைகளுடன் இந்த சீசன் தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி (ரூபி) திருச்சி, சீகம் மதுரை பாந்தர்ஸ் என்று மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன.

IPL 2024: ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை விடுவிடுக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

இதில், யாருக்கெல்லாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் ரூ.6 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ. 6 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் ஏ பிரிவில் இடம் பெற்றவர்கள். இது தவிர ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் உள்பட 20 டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடி வீரர்களுக்கு ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் பி1 மற்றும் பி2 பிரிவில் இடம் பெற்றவர்கள்.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

இது தவிர சி பிரிவி கேட்டகரியில் இடம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சீசனில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அடுத்து 3ஆவது மற்றும் 4ஆவது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவி அம்பயரை விமர்சித்த கில்லிற்கு சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம், டீமுக்கு 100 சதவிகிதம் அபராதம்!

இந்த நிலையில், இன்று தொடங்கும் 7ஆவது சீசனின் முதல் போட்டியில் ஐடீரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த அணியில், விஜய் சங்கர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடிய சாய் கிஷோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சாய் கிஷோர் தான் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று லைகா கோவை கிங்ஸ் அணியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரர் சாய் சுதர்சன், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷாருக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், லைகா கோவை கிங்ஸ் அணிக்கு ஷாருக்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

TNPL 2023 Players Salary: சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 6 லட்சம்!

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:

பால்சந்தர் அனிருத், NS சதுர்வேத், S கணேஷ், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), P புவனேஸ்வரன், S அஜித் ராம், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), G பெரியசாமி, S மணிகண்டன்.

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

சுந்தரம் ராதாகிருஷ்ணன், முகமது அலி, திரிலோக் நாயக், விஷால் வைத்யா

லைகா கோவை கிங்ஸ்:

பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக் கான் (கேப்டன்), எம் முகமது, கிரண் ஆகாஷ், மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், கே கௌதம் தாமரை கண்ணன்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

ஆதிக் ரஹ்மான், வள்ளியப்பன் யுதீஸ்வரன், சுஜய், வித்யுத்.

TNPL 2023 Players Salary: சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 6 லட்சம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?