உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியாவோ 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் தவிர மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. மேலும் அனைத்து ஐசிசி டிராபிகளைகளையும் வென்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது.
இதையடுத்து 2023-25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில், 9 அணிகள் இடம் பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரில் பங்கேற்கின்றன. இதில் 3 ஹோம் மற்றும் 3 அவே டெஸ்ட் தொடர்கள் என்று 6 தொடர்கள் நடத்தப்படும். ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.
TNPL 2023: முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் பலப்பரீட்சை!
இதில், மொத்தமாக 27 தொடர்கள் மற்றும் 68 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து 3ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆஷஸ் தொடர் மூலமாக ஆரம்பமாகிறது. இந்த 3ஆவது சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூன் 2025 ஆம் ஆண்டு முடிவடைகிறது.
அணிகள் | போட்டிகள் | உள்ளூர் | அவே | அவே (நாடுகள்) |
இந்தியா | 19 | 10 | 9 | Aus, WI, SA |
ஆஸ்திரேலியா | 19 | 10 | 9 | Eng, NZ, SL |
இங்கிலாந்து | 21 | 10 | 11 | NZ, IND, Pak, |
நியூசிலாந்து | 14 | 07 | 07 | Ind, Ban, SL |
இலங்கை | 12 | 06 | 06 | Eng, SA, Ban |
பாகிஸ்தான் | 14 | 07 | 07’ | Aus, SA, SL |
வெஸ்ட் இண்டீஸ் | 13 | 06 | 07 | Aus, Eng, Pak |
தென் ஆப்பிரிக்கா | 12 | 06 | 06 | NZ, WI, Ban |
வங்கதேசம் | 12 | 06 | 06 | Ind, WI, Pak |