ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?

Published : Sep 29, 2023, 06:10 PM IST
ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?

சுருக்கம்

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இது வரையில் நடந்த 12 உலகக் கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.

IND vs ENG Warm Up Match:38 மணி நேரமாக எகானமி கிளாஸில் பயணித்த இங்கிலாந்து வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ் விமர்சனம்!

தற்போது இந்தியாவில் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடுகின்றன.

Warm Up Matches: ஒரே நேரத்தில் 3 போட்டிகள்: தொடங்கிய வார்ம் அப் போட்டிகள், RSA vs AFG போட்டி மழையால் பாதிப்பு!

சென்னை, பெங்களூரு, மும்பை, லக்னோ, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதன்படி, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030 மற்றும் 2031 ஆண்டுகள் உலகக் கோப்பை எங்கு நடக்கிறது, எத்தனை அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

England vs New Zealand, 1st Match: உலகக் கோப்பை முதல் போட்டியிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்?

ஐசிசி உலகக் கோப்பைகள் 2023 முதல் 2031 வரையில்:

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024:

மொத்தம் 20 அணிகள், போட்டிகள் 55

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 – இந்தியா நடத்துகிறது.

ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 – பாகிஸ்தான் நடத்துகிறது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026: இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027: தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே நாடுகள் நடத்துகின்றன.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2028 – நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து நடத்துகின்றன.

ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2029 – இந்தியா நடத்துகிறது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2030 - இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து இணைந்து நடத்துகின்றன.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2031: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து நடத்துகின்றன.

உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் இன்று தொடக்கம் – BAN vs SL, RSA vs AFG, NZ vs PAK பலப்பரீட்சை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!