
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, மும்பை, பெங்களூர், லக்னோ, அகமதாபாத், டெல்லி, தர்மசாலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டியானது நடத்தப்படுகிறது.
England vs New Zealand, 1st Match: உலகக் கோப்பை முதல் போட்டியிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்?
உலகக் கோப்பைக்கான 10 அணி வீரர்களும் நேற்று உறுதி செய்யப்பட்டனர். இதில், சில வீரர்கள் இடம் பெற்றனர். சில வீரர்கள் நீக்கப்பட்டனர். அந்த வகையில் இந்திய அணியிலிருந்து அக்ஷர் படேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று ஒவ்வொரு அணியும் இந்தியா வந்து நெட் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் பயிற்சி போட்டிகள் நடக்கிறது. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கான இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்திலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது திருவனந்தபுரத்திலும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது ஹைதராபாத்திலும் நடக்கிறது.
உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் இன்று தொடக்கம் – BAN vs SL, RSA vs AFG, NZ vs PAK பலப்பரீட்சை!
வங்கதேசம் – இலங்கை – முதல் வார்ம் அப் போட்டி – கவுகாத்தி
கவுகாத்தியில் நடக்கும் முதல் வார்ம் அப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் – 2ஆவது வார்ம் அப் போட்டி – திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கும் 2ஆவது வார்ம் அப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆனால், இந்தப் போட்டியானது கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மழை நின்ற பிறகு டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து – பாகிஸ்தான் – 3ஆவது வார்ம் அப் போட்டி – ஹைதராபாத்
ஹைதராபாத்தில் தற்போது நடந்து வரும் 3ஆவது வார்ம் அப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் மட்டுமே செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு 8ஆவது தங்கம் பெற்றுக் கொடுத்த பாலக் குலியா!