
இந்தியாவில் 13 ஆவது உலககக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான 10 அணிகளும் இந்தியாவிற்கு வந்துள்ளன. மேலும், 10 மைதானங்களில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதோடு, அதற்கு முன்னதாக இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் நடக்கிறது. இதில், முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளும், 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், 3ஆவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மோதுகின்றன.
உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் இன்று தொடக்கம் – BAN vs SL, RSA vs AFG, NZ vs PAK பலப்பரீட்சை!
இன்று முதல் நாளில் மட்டும் 3 போட்டிகள் நடக்கிறது. கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடக்கிறது. பாகிஸ்தான் போட்டி என்பதால், ஹைதராபாத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு 8ஆவது தங்கம் பெற்றுக் கொடுத்த பாலக் குலியா!
இந்த நிலையில், தான் நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடும் நிலையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை முதல் போட்டியில் இடம் பெற மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்று விளையாடிய கேன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே முழங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் தொடரிலிருந்து விலகினார்.
உலகக் கோப்பை வார்ம்-அப்களில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்ட முழங்காலை பரிசோதிக்க கேன் வில்லியம்சன் முடிவு செய்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி விளையாடு 2 வார்ம் அப் போட்டிகளிலும் பங்கேற்கும் அவர், முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பரான டாம் லாதம் முதல் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது.
உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து வீரர்கள்:
கேன் வில்லியம்சன், (கேப்டன்), டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீசம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.