Ravichandran Ashwin: இந்திய அணியிலிருந்து அக்‌ஷர் படேல் நீக்கம்: கடைசி நேரத்தில் அஸ்வினுக்கு அடித்த ஜாக்பாட்!

By Rsiva kumar  |  First Published Sep 28, 2023, 9:10 PM IST

உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தமிழக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இந்தியா நடத்தும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இதில், இடம் பெற்றுள்ள 10 அணிகளும் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டியில் இடம் பெற்று விளையாட உள்ளன. நாளை முதல் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டிகள் நடக்க இருக்கிறது.

இந்தியாவின் ஹீரோக்கள் ஒன்றிணைந்த தருணம்! காணொளி காட்சியில் நிகழ்ந்த அபூர்வமான சந்திப்பு!

Tap to resize

Latest Videos

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்‌ஷர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Hangzhou 2023: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்: அசத்திய அர்ஜுன் சீமா, சரப்ஜோத் சி, ஷிவா நர்வா டீம்!

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்‌ஷர் படேல் இடம் பெற்று விளையாடினார். அப்போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார்.

Welcome to India: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாகிஸ்தான் – முதல் முறையாக பாபர் அசாம் இந்தியா வருகை!

இதே போன்று தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அக்‌ஷர் படேல் இடம் பெறவில்லை. மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும், முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் இடம் பெற்று விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஆனால், கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில், அஸ்வின் இடம் பெறாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்திய அணியும் அஸ்வினை அணியில் இடம் பெறச் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கியது.

ஆறுதல் வெற்றியோடு CWCல் எண்ட்ரி கொடுக்கும் ஆஸ்திரேலியா – போராடி தோற்ற இந்தியா!

அதன் பிறகு அவரது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சி ஆகியவற்றை கொண்டு அணியில் இடம் பெறச் செய்வது என்று முடிவு செய்துள்ளது. இவ்வளவு ஏன், கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை உறுதி செய்வதற்கு இன்று தான் கடைசி நாள் என்ற நிலையில், காயம் காரணமாக முழு உடல் தகுதி பெறாத அக்‌ஷர் படேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரையில் அஸ்வின் விளையாடிய 94 டெஸ்ட் போட்டிகளில் 489 விக்கெட்டுகளும், 115 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 155 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

India vs Australia: புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா – சர்வதேச கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்கள் அடித்த Hitman!

உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்

click me!