Welcome to India: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாகிஸ்தான் – முதல் முறையாக பாபர் அசாம் இந்தியா வருகை!

By Rsiva kumar  |  First Published Sep 27, 2023, 11:21 PM IST

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்காக பாகிஸ்தான் அணியானது 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது.


இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ, ஹைதராபாத், தர்மசலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

ஆறுதல் வெற்றியோடு CWCல் எண்ட்ரி கொடுக்கும் ஆஸ்திரேலியா – போராடி தோற்ற இந்தியா!

Tap to resize

Latest Videos

 

Babar Azam first time reached India & Pakistan cricket team reached India after 7 years in Hyderabad.

Welcome To India pic.twitter.com/0itkU5YwcQ

— Mufa Kohli (@MufaKohli)

 

Babar Azam gave India ticket to Pakistan's players in a unique way to announce their their World Cup squad.

Welcome to India Babar. pic.twitter.com/rYQA0pCkLj

— Mufa Kohli (@MufaKohli)

 

Babar Azam and entire Pakistan Cricket Team was welcomed at the airport by Indian security. They visited India after 7 years.
Welcome to India pic.twitter.com/CzE5PBFJMt

— Mufa Kohli (@MufaKohli)

 

இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. இலங்கை அணி நேற்று தங்களது அணியை அறிவித்த நிலையில், கடைசியாக வங்கதேச அணியும் நேற்று தங்களது அணியை அறிவித்தது.

India vs Australia: புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா – சர்வதேச கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்கள் அடித்த Hitman!

 

ஒருவழியாக வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து ஒவ்வொரு அணிக்கும் வார்ம் அப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் இந்தியா வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் இந்தியா வந்த நிலையில், இன்று பாகிஸ்தான் அணியும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்துள்ளது. ஹைதராபாத் விமான நிலையம் வந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதல் முறையாக இந்தியா வந்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.

உலகக் கோப்பையை குறி வைத்து இந்தியாவிற்கு குர்பத்வந்த் சிங் பண்ணுன் பகிரங்க மிரட்டல் – வைரலாகும் ஆடியோ!

பாகிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாபர் அசாம் கூறியிருப்பதாவது: ஆசிய கோப்பையிலிருந்து எங்களது குறைகளை சரி செய்து திட்டங்களை மாற்றியமைத்துள்ளோம். இந்த முறை உலகக் கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார். இதுவரையில் நடந்த 12 உலகக் கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா 5 முறை சாம்பியனாகியுள்ளது. இந்தியா 3 முறை சாம்பியன் டிராபியை கைப்பற்றியது. பாகிஸ்தான் 2 முறை டிராபியை வென்றுள்ளது.

ODI World Cup Warm Up Match Schedule 2023: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி அட்டவணை வெளியீடு!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணியானது இந்தியா வந்து விளையாடியது. ஆனால், அந்த தொடரில் பாகிஸ்தான் கேப்டனான பாபர் அசாம் காயம் காரணமாக அவர் இடம் பெறவில்லை. ஷாஹீன் அஃப்ரிடி கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தினார். எனினும், அந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த முகமது நவாஸ் மற்றும் சல்மான் அலி அகா ஆகியோர் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஜெட் வேகத்தில் சென்ற ஆஸி, ஸ்கோர் – டர்னிங் பாய்ண்டான குல்தீப் யாதவ், பும்ரா – இந்தியாவிற்கு 353 ரன்கள் இலக்கு

 

Thanks to Indians for a warm welcome of Pakistan Cricket Team🇵🇰 Welcome to India Team Pakistan Bumrah Iftikhar King Kohli Starc Glenn Maxwell Bumrah pic.twitter.com/c9OdPn7uxJ

— Syed Samee (@sameecricket360)

 

உலகக் கோப்பைக்கு முன்னதாக 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டியில் ஒவ்வொரு அணியும் இடம் பெற்று விளையாடுகின்றன. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 29 வங்கதேசம் – இலங்கை கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 29 தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 29 நியூசிலாந்து – பாகிஸ்தான் – ஹைதராபாத் பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 30 இந்தியா – இங்கிலாந்து – கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 30 ஆஸ்திரேலியா – நெதர்லாந்து திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 02 நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 02 இங்கிலாந்து – வங்கதேசம் கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 03 ஆப்கானிஸ்தான் – இலங்கை கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 03 இந்தியா – நெதர்லாந்து திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 03 பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஹைதராபாத் பிற்பகல் 2.00 மணி

இந்த வார்ம் அப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் லைட் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

click me!