IND vs ENG Warm Up Match:38 மணி நேரமாக எகானமி கிளாஸில் பயணித்த இங்கிலாந்து வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ் விமர்சனம்

By Rsiva kumar  |  First Published Sep 29, 2023, 5:16 PM IST

உலகக் கோப்பைக்காக இந்தியா வந்த இங்கிலாந்து வீரர்கள் கிட்டத்தட்ட 38 மணி நேரமாக எகானாமி கிளாஸில் பயணம் செய்து வந்துள்ளனர்.


இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, மும்பை, பெங்களூர், லக்னோ, அகமதாபாத், டெல்லி, தர்மசாலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டியானது நடத்தப்படுகிறது.

Warm Up Matches: ஒரே நேரத்தில் 3 போட்டிகள்: தொடங்கிய வார்ம் அப் போட்டிகள், RSA vs AFG போட்டி மழையால் பாதிப்பு!

Tap to resize

Latest Videos

உலகக் கோப்பைக்கான 10 அணி வீரர்களும் நேற்று உறுதி செய்யப்பட்டனர். இதில், சில வீரர்கள் இடம் பெற்றனர். சில வீரர்கள் நீக்கப்பட்டனர். அந்த வகையில் இந்திய அணியிலிருந்து அக்‌ஷர் படேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று ஒவ்வொரு அணியும் இந்தியா வந்து நெட் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் பயிற்சி போட்டிகள் நடக்கிறது. நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் நடக்கிறது.

England vs New Zealand, 1st Match: உலகக் கோப்பை முதல் போட்டியிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்?

அதற்காக இங்கிலாந்து வீரர்கள் கவுகாத்திக்கு புறப்பட்டு வந்துள்ளனர். புறப்பட்ட 38 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் இருக்கும் குழுவினர் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஜானி பேர்ஸ்டோவ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், 38 மணி நேரம் மற்றும் தொடர்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இங்கிலாந்து வீரர்கள் கவுகாத்தி வந்து இறங்கியுள்ளனர். அங்கு, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வார்ம் அப் போட்டி நடக்க இருக்கிறது. இதையடுத்து வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் இன்று தொடக்கம் – BAN vs SL, RSA vs AFG, NZ vs PAK பலப்பரீட்சை!

click me!