உலகக் கோப்பை தொடரானது வரும் 5ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதன் தொடக்க விழாவானது அக்டோபர் 4 ஆம் தேதி நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோல்வி அடைந்து வெளியெறியது. இதையடுத்து இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ளன.
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. சென்னை, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு என்று மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான போட்டி என்றால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி தான். இந்தப் போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறேன்; இன்னும் குறைந்த பந்துகளில் சதம் அடிக்க வேண்டும் – ஜோஸ் பட்லர்!
இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியும், கடைசி போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அதுமட்டுமின்றி மிகவும் முக்கியமான போட்டியும் இந்த மைதானத்தில் தான் நடக்கிறது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் நவ.4ஆம் தேதி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போட்டியும், நவ.10ல் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் போட்டியும், நவ.19ல் நடக்கும் இறுதிப் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.
பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!
இந்த நிலையில் தான் அகமதாபாத் மைதானத்தில் தொடக்க விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள்:
இந்தியா – ரோகித் சர்மா
இலங்கை – தசுன் ஷனாகா
ஆஸ்திரேலியா – பேட் கம்மின்ஸ்
நியூசிலாந்து – டாம் லாதம் (கேன் வில்லியம்சன் இலையென்றால்)
இங்கிலாந்து – ஜோஸ் பட்லர்
பாகிஸ்தான் – பாபர் அசாம்
வங்கதேசம் – ஷாகிப் அல் ஹசன்
தென் ஆப்பிரிக்கா – டெம்பா பவுமா
ஆப்கானிஸ்தான் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி
நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்
அதுமட்டுமின்றி உலகக் கோப்பை தொடக்க விழாவை கேப்டன்ஸ் டே என்று அழைக்க ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் ஜான்வி கபூர் மற்றும் சமந்தா ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Shreyas Iyer: முதுகு வலி காயம் குறித்து வெளிப்படையாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்!