England vs New Zealand: உலகக் கோப்பைக்கான டிராபியை தூக்கி வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

By Rsiva kumar  |  First Published Oct 5, 2023, 3:56 PM IST

உலகக் கோப்பைக்கான முதல் லீக் போட்டிக்கு முன்னதாக உலகளாவிய அம்பாஸிடரான இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பைக்கான டிராபியை மைதானத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

ENG vs NZ: 2023 உலகக் கோப்பை – முதல் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்!

Tap to resize

Latest Videos

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக உலகளாவிய அம்பாஸிடரான சச்சின் டெண்டுல்கர், உலகக் கோப்பைக்கான டிராபியை மைதானத்திற்குள் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் 6, உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி சாதனைகளை படைத்துள்ளார்.

 

Sachin Tendulkar escorts the World Cup trophy to its podium at the opening match 🏆 pic.twitter.com/k2iv2OBKsO

— krishna (@k3__19)

 

ENG vs NZ: கேன் வில்லியம்சன், டிம் சவுதி, இஷ் சோதி, பெர்குசன் யாருமே இல்லை; டாஸ் வென்ற நியூசி., பவுலிங்!

இதுவரையில் 6 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளேன். 2011ல் உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமையான தருணம். "இந்தியாவில் 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பல சிறப்பு அணிகள் மற்றும் வீரர்கள் கடுமையாகப் போட்டியிட உள்ளதால், இந்த அற்புதமான போட்டியை நான் உற்சாகமாக எதிர்நோக்குகிறேன் என்று சச்சின் கூறியிருந்தார்.

CWC 2023: கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கிரேட் காளி!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தற்போது வரையில் 24 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சிக்ஸர் அடித்து அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார்.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

 

ICC Global Ambassador Sachin Tendulkar with the World Cup trophy.

Picture of the day! pic.twitter.com/Ju9WQqzkT9

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

Sachin Tendulkar in front of the World Cup trophy. pic.twitter.com/u4VbPzXDOl

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

God of cricket Sachin Tendulkar in Narendra Modi Stadium. pic.twitter.com/zlsaFJUbJS

— Johns. (@CricCrazyJohns)

 

click me!