நீங்கள் எப்படி இந்தியாவை ஜெயிக்க முடியும்? பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த கம்ரான் அக்மல்!

By Rsiva kumar  |  First Published Aug 27, 2023, 6:58 PM IST

உங்களால் இதை கூட செய்ய முடியவில்லை என்றால், எப்படி ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை ஜெயிக்க முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சனம் செய்துள்ளார்.


ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்க இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது நேற்றுடன் முடிந்தது.

பும்ராவுக்கு அறிவுரை வழங்கிய கிரிக்கெட் ஜாம்பவான்: இப்படியெல்லாம் பந்து வீசினால் மறுபடியும் ஆபரேஷன் தான்!

Tap to resize

Latest Videos

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஒரு விக்கெட் எஞ்சிய நிலையில், 302 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐசிசி ரேங்கிங் பட்டியலில் 2725 புள்ளிகள் பெற்று நம்பர் 1 அணியாக நிரூபித்த பாகிஸ்தான்!

இதைத் தொடர்ந்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், பாகிஸ்தான் முதலில் ஆடி 268 ரன்கள் எடுத்த்து. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்!

அதோடு, ஐசிசி ஒரு நாள் போட்டி அணிகளின் ரேங்கிங் பட்டியலில் பாகிஸ்தான் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. 2ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இந்தியா 3ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் செயல்பாடு கவலை அளிப்பதாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத இலங்கை கிரிக்கெட்டர் வணிந்து ஹசரங்கா!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணியால் 300 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடரானது, பயிற்சி போட்டியாக அமைந்தது. பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் எடுப்பதற்கு 2 முறை வாய்ப்பு கிடைத்தது. இதில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தங்களதுப் பொறுப்பை உணர்ந்து விளையாடிருக்க வேண்டும்.

ஆனால், அப்படி ஒன்றும் பாகிஸ்தான் வீரர்கள் செய்யவில்லை. முன்வரிசை வீரர்கள் செய்ய வேண்டியதை, அணியின் கடைசி வீரர்கள் செய்திருக்கிறார்கள். இது, பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால் நிறைந்த ஒன்று தான் என்று விமர்சனம் செய்துள்ளார்.

click me!