TNPL 2022: ஹரி நிஷாந்த் அதிரடி அரைசதம்.. லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி

By karthikeyan V  |  First Published Jun 26, 2022, 11:03 PM IST

ஹரி நிஷாந்த்தின் அதிரடி அரைசதத்தால் லைகா கோவை கிங்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
 


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸும் லைகா கோவை கிங்ஸும் மோதிய போட்டி நெல்லையில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 7.5 ஓவரில் 67 ரன்களை முதல் விக்கெட்டுக்கு சேர்த்து கொடுத்தனர். சுரேஷ் குமார் 37 ரன்னிலும், ஸ்ரீதர் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

அதன்பின்னர் முகிலேஷும், ஷிஜித் சந்திரனும் அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவருமே அடித்து ஆடினர்.  குறிப்பாக முகிலேஷ் பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஸ்ரீதர் 20 பந்தில் 30 ரன்கள் அடிக்க, ஷாருக்கானும் தன் பங்கிற்கு 8 பந்தில் 19 ரன்களை அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்

189 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஹரி நிஷாந்த் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஹரி நிஷாந்த் 36 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் 60 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான விஷால் வைத்யா 40 பந்தில் 49 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவரில் 100 ரன்களை குவித்தனர்.

இதையும் படிங்க - இவரை மாதிரியான ஒரு பிளேயர் இந்திய அணியில் கண்டிப்பா தேவை.! அதிரடி வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு

ஹரி நிஷாந்த் மற்றும் விஷால் வைத்யா ஆகிய இருவரும் அமைத்து கொடுத்த அதிரடி தொடக்கத்தாலும், பின்வரிசையில் விவேக் 10 பந்தில் 22 ரன்கள் அடித்து முடித்து கொடுத்ததாலும், 189 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
 

click me!