TNPL 2022: முகிலேஷ், ஷிஜித் அதிரடி பேட்டிங்.. திண்டுக்கல் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த கோவை அணி

By karthikeyan VFirst Published Jun 26, 2022, 9:17 PM IST
Highlights

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்களை குவித்து, 189 ரன்கள் என்ற கடின இலக்கை திண்டுக்கல் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸும் லைகா கோவை கிங்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்; இப்போ லாகூரில் துணிக்கடை ஓனர்! 9 வருஷமா கிரிக்கெட்டே பார்க்காத கொடுமை

முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 7.5 ஓவரில் 67 ரன்களை முதல் விக்கெட்டுக்கு சேர்த்து கொடுத்தனர். சுரேஷ் குமார் 37 ரன்னிலும், ஸ்ரீதர் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - நீ பெரிய பிளேயரா இருக்கலாம்; அதுக்காக 14 மேட்ச்ல ஒரு அரைசதம் கூட அடிக்கலைனா எப்படி?ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

அதன்பின்னர் முகிலேஷும், ஷிஜித் சந்திரனும் அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவருமே அடித்து ஆடினர்.  குறிப்பாக முகிலேஷ் பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டார்.

இதையும் படிங்க - IRE vs IND: முதல் டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஸ்ரீதர் 20 பந்தில் 30 ரன்கள் அடித்தார். ஷாருக்கானும் தன் பங்கிற்கு 8 பந்தில் 19 ரன்களை அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்த கோவை அணி, 189 ரன்கள் என்ற கடின இலக்கை திண்டுக்கல் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!