IRE vs IND: முதல் டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

By karthikeyan VFirst Published Jun 26, 2022, 9:01 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

ஹர்திக் பாண்டியா தலைமையிலான  இந்திய அணி அயர்லாந்தில் 2 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையில் கோலி, பும்ரா, ரிஷப் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் உள்ளது. 

அதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்துக்கு சென்றுள்ளது. இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்படும் ஹர்திக் பாண்டியா, முதல் போட்டியிலேயே டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் அறிமுகமாகிறார். ஐபிஎல்லில் அசால்ட்டாக தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி அசத்திய உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த போட்டியில் அவருக்கு அறிமுகமாகும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தீபக் ஹூடாவிற்கு இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.

இதையும் படிங்க  - இவரை மாதிரியான ஒரு பிளேயர் இந்திய அணியில் கண்டிப்பா தேவை.! அதிரடி வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், லார்கன் டக்கர் (விக்கெட்கீப்பர்), ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், ஆண்டி மெக்ப்ரின், க்ரைக் யங், ஜோஷூவா லிட்டில், கானார் ஆல்ப்.
 

click me!