SL vs AUS: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு.. ODI-யில் அசத்திய அருமையான வீரருக்கு டெஸ்ட் அணியில் இடம்

Published : Jun 25, 2022, 09:54 PM IST
SL vs AUS: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு.. ODI-யில் அசத்திய அருமையான வீரருக்கு டெஸ்ட் அணியில் இடம்

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்ற நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதியும், 2வது டெஸ்ட் ஜூலை 8ம் தேதியும் தொடங்குகிறது.

இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்

இந்த டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த ரிஸ்ட் ஸ்பின்னரான ஜெஃப்ரி வாண்டர்சே டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - இவரை மாதிரியான ஒரு பிளேயர் இந்திய அணியில் கண்டிப்பா தேவை.! அதிரடி வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு

ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடியதன் விளைவாக வாண்டர்சேவிற்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்; இப்போ லாகூரில் துணிக்கடை ஓனர்! 9 வருஷமா கிரிக்கெட்டே பார்க்காத கொடுமை

இலங்கை டெஸ்ட் அணி:

திமுத் கருணரத்னே (கேப்டன்), பதும் நிசாங்கா, ஒஷாடா ஃபெர்னாண்டோ, ஆஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, காமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, காசுன் ரஜிதா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா, பிரவீன் ஜெயவிக்ரமா, லசித் எம்பல்டேனியா, ஜெஃப்ரி வாண்டர்சே.
 

PREV
click me!

Recommended Stories

India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!