TNPL 2022: நெல்லை அணி நல்ல பவுலிங்.. ஃபெராரியோ அரைசதத்தால் சவாலான இலக்கை நிர்ணயித்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ்

By karthikeyan VFirst Published Jun 25, 2022, 9:08 PM IST
Highlights

நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவரில் 149 ரன்கள் அடித்து, 150 ரன்கள் என்ற சவாலான இலக்கை நெல்லை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்ட்டான்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது.

நெல்லையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி:

லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ், பிரதோஷ் பால், பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜி அஜிதேஷ், சஞ்சய் யாதவ், ஜிதேந்திர குமார், எம் ஷாஜகான், என்.எஸ்.ஹரீஷ், அதிசயராஜ் டேவிட்சன், ஆர்யா யோஹன் மேனன்.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி:

கோபிநாத், ஜாஃபர் ஜமால், எஸ் அபிஷேக், ஆர் கவின் (விக்கெட் கீப்பர்), டேரைல் ஃபெராரியோ, ரவி கார்த்திகேயன், ஜி கிஷோர், எம் கணேஷ் மூர்த்தி, முருகன் அஷ்வின் (கேப்டன்), ஜி பெரியசாமி, பி பிரானேஷ்.

முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜாஃபர் ஜமால் 11 ரன்னிலும், கோபிநாத் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 30 ரன்களுக்கே சேலம் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரைல் ஃபெராரியோ மற்றும் கவின் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்

3வது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 91 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய கவின் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை 2 ரன்னில் தவறவிட்டார். அதன்பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ஃபெராரியோ 49 பந்தில் 60 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 149 ரன்கள் அடித்த சேலம் அணி 150 ரன்கள் என்ற சவாலான இலக்கை நெல்லை அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க - ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்; இப்போ லாகூரில் துணிக்கடை ஓனர்! 9 வருஷமா கிரிக்கெட்டே பார்க்காத கொடுமை

நெல்லை அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். சேலம் அணியில் ஃபெராரியோ விக்கெட்டை தவிர மற்றவர்களின் விக்கெட்டுகளை அபாரமாக பந்துவீசி வீழ்த்தினர். ஹரிஷ் மற்றும் டேவிட்சன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

click me!