16ஆவது ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக காயமடைந்த வீரர்கள் யார் யார் தெரியுமா?

Published : Jan 04, 2023, 10:21 PM IST
16ஆவது ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக காயமடைந்த வீரர்கள் யார் யார் தெரியுமா?

சுருக்கம்

ரிஷப் பண்ட் முதல் ஜோஃப்ரா ஆர்ச்சர் வரை ஐபிஎல் வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி கொச்சியில் நடந்து முடிந்தது. இந்த  ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரண் அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதே போன்று இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். மாயங்க் அகர்வால் ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஷிவம் மாவி ரூ.6 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக காயம் அடைந்தவர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் காண்போம்.

ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

ரிஷப் பண்ட்:

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் மும்பைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக மாற்றப்பட இருக்கிறார். மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட இருக்கிறார். இந்த மருத்துவமனையில் வைத்து ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. ஆகையால், இந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த முன்னாள் பெங்கால் வீரர் பிரகாஷ் போத்தார் காலமானார்!

கிளென் மேக்ஸ்வெல்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல்லுக்கு விபத்து ஒன்றில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்.

கேமரூன் கிரீன்:

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கேமரூன் கிரீன் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவரது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். வரும் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குப் பிறகு மும்பை அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் கண்ணீர் மல்க விடைபெற்றுச் சென்ற கறுப்பு முத்து: பீலேயின் உடல் நல்லட்டக்கம் செய்யப்பட்டது!

ஜானி பேர்ஸ்டோவ்:

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஜானி பேர்ஸ்டோவ் கோல்ஃப் விளையாட்டு விளையாடும் போது தவறி கீழே விழுந்ததில் அவரது கணுக்கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால், ஐபிஎல் சீசன் முழுவதும் அவரால் விளையாட முடியும் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜோப்ஃரா ஆர்ச்சர்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ஃரா ஆர்ச்சர் காயங்களால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு முழுவதும் விளையாடவில்லை. தற்போது இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசனில் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஷிவம் மாவி 4 விக்கெட்: கடைசில சொதப்பியும் காப்பாத்திக் கொடுத்த அக்‌ஷர்: இந்தியா த்ரில் வெற்றி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?