ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் தமிழக அணிக்கு எதிரான சதம் அடித்துள்ளார்.
மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தமிழக அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்சன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இவர் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 போட்டியிலும் தோல்வி: இதென்ன இலங்கை அணிக்கு வந்த சோதனை!
தமிழக அணி 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும், ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து ஆடிய மும்பை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணியில் சர்ஃப்ராஸ் கான் சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவரது 12 ஆவது சதம் ஆகும்.
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி இவ்வளவு மிஸ்டேக் செய்திருக்கா?
தற்போது வரை மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃப்ராஸ் கான் அதிகபட்சமாக 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொகித் அவஸ்தி 68 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு மும்பை அணியின் அவஸ்தி மற்றும் சித்தார்த் ராவத் ஆகியோர் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்துள்ளனர்.
கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்!