வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டதில் ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், டேவிட் மலான் உள்ளிட்ட 9 வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலிருந்து நடப்பு சாம்பியன் பரிதாபமாக வெளியேறியது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதுவரையில் 44 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறின.
இந்த நிலையில், நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 44ஆவது லீக் போட்டியி டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்தது. இதில், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட் என்று சீனியர் பிளேயர்கள் இடம் பெறவில்லை. உலகக் கோப்பை தொடரில் இவர்கள் யாரும் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. ஆகையால், அவர்களது பெயர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறவில்லை. மொயீன் அலி ஒரு நாள் தொடரில் இடம் பெறாவிட்டலும் டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். ஆனால் ஜோஸ் பட்லர் பெயர் மட்டும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார். அதுவும், அவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தாடைகள் அணிந்து கொண்டு ஒரு குடும்பமாக தீபாவளி கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
ஒருநாள் போட்டி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஆலி போப், பில் சால்ட், ஜோஸ் டங்கு, ஜான் டர்னர்
டி20 தொடர்:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன்,டைமல் மில்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங்கு, ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், கிறிஸ் வோக்ஸ்