விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அவரவர் குணாதிசியங்களில் சிறந்து விளங்குபவர்கள்.
இந்தியாவின் மிகவும் முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், இவர்கள் இருவரில் யார் அதிக ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் என்று கண்டறிவதில் அதிக சிரமம் உண்டு. இருவரும் தங்களுக்கென்று தனித்துவமான பாணியைக் கொண்டிருக்கிறார்கள்.
IND vs PAK Match: ஸ்டார் ஹோட்டல்களில் 2 இரவுக்கு ரூ.3,50,000 வாடகையா?
எம்.எஸ்.தோனி:
இந்தியாவிற்கு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை பெற்றுக் கொடுத்தவர். தோனி மிகவும் எளிமையானவர். எப்போதும் எளிமையான ஆடைகளை அணிவதை அதிகம் விரும்பக் கூடியவர். ஜீன்ஸ், டி ஷர்ட்டுகள் மற்றும் சாதாரண சட்டைகளை அணியக் கூடியவர். ஆடம்பரத்திலிருந்து விலகியிருக்க கூடியவர்.
ஆனால், தோனியின் ஹேர்ஸ்டைல் மட்டுமே தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பேசப்பட்டு வந்துள்ளது. நீண்ட தலைமுடி முதல், ஷார்ட் கட், மொட்ட தலை என்று தோனியின் ஹேர் ஸ்டைல் பேசப்பட்டு வந்தது. கார் மற்றும் பைக் மீது அதிக அன்பு கொண்டவர். இதன் மூலமாக இறுதியாக நாம் முடிவுக்கு வருவது என்னவென்றால், பைக்கர் ஜாக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர் என்று சொல்லாம்.
Asia Cup 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பைக்கான புரோமோ வீடியோ வெளியீடு!
விராட் கோலி:
விராட் கோலி மிகவும் ஸ்டைலிஷான கிரிக்கெட் வீரர். உடல் முழுவதும் டாட்டூவும் போட்டுக் கொண்டுள்ளார். விராட் கோலி கூர்மையான மற்றும் வடிவமைக்கப்பட்ட ஆடைகளுக்கு பெயர் போனவர். பெரும்பாலும் நன்கு ஃபிட்டாக கூடிய சூட்கள், மிருதுவான சட்டைகள் மற்றும் ஸ்டைலான காலணிகளை அணிந்திருப்பார். ஹேர்ஷ்டைலுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க கூடியவர். பெரும்பாலும், இவரது ஹேர்ஷ்டைல் கூட பல நேரங்களில் பேசப்பட்டிருக்கிறது. உடற்தகுதியின் மீதே அவரது கவனம் முழுவதும் செலுத்தப்படுகிறது.
Virat Kohli Gym Work Out Video: வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் விராட் கோலி – வைரலாகும் வீடியோ!
தோனி மற்றும் கோலி இருவரும் பல்வேறு ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். பல பேஷன் நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸிடர்களாகவும் இருக்கிறார்கள். தோனிக்கு விளையாட்டு மற்றும் கார், பைக் ஆகியவற்றின் மீது கவனம் இருக்கும். கோலிக்கு ஃபேஷன் ஸ்டைல் மீது அதிக ஆர்வம் இருக்கும்.
World Cup 2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு தொடங்கியது: டிக்கெட் வெளியீடு, அறிவிப்பு வரும்!
தோனியின் பாணி மிகவும் நிதானமான மற்றும் சாதாரண அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. கோஹ்லியின் ஸ்டைல் மெருகூட்டப்பட்ட மற்றும் சமகால தோற்றத்தை நோக்கி சாய்ந்துள்ளது. இரு கிரிக்கெட் வீரர்களும் களத்தில் மட்டுமின்றி ஃபேஷன் உலகிலும் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர், அவர்களது ஸ்டைல்கள் தங்கள் ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வீரரது நடை, உடை, பாவணை என்று எல்லாமே அவர்களின் ஆளுமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட முகமது ஷமி: சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்!