
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா 7 முறை சாம்பியனாகியுள்ளது. மூன்று முறை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதே போன்று இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.
Virat Kohli Gym Work Out Video: வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் விராட் கோலி – வைரலாகும் வீடியோ!
இதில், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என்று 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரானது வரும் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கிறது.
World Cup 2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு தொடங்கியது: டிக்கெட் வெளியீடு, அறிவிப்பு வரும்!
இந்த நிலையில், நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட முகமது ஷமி: சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்!