
தரம்சாலாவில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 21ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 46 ரன்கள் குவித்தார். தரம்சாலாவில் ரோகித் சர்மா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும், ஒரே ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது வரையில் 53 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பார். இதே போன்று உலகக் கோப்பை போட்டிகளில் 40 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும், 10 சிக்ஸர்கள் அடித்தால் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பார்.
சுப்மன் கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 27 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க அடுத்து தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பரிதாபமாக 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு கட்டத்தில் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 49ஆவது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திடுவார் என்று ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தப் போட்டியும் வங்கதேச அணி போட்டியைப் போன்று சென்றது. இதனை டிஸ்னி+ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங் வரலாற்றில் மட்டும் 4.3 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
புகை மண்டலமாக காட்சி தந்த தரம்சாலா - பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறிய இந்திய வீரர்கள்!
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்ததன் மூலமாக டிஜிட்டல் லைவ் ஸ்ட்ரீமிங் வரலாற்றில் முதல் முறையாக ஹாட் ஸ்டார் 4.3 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது 3.5 கோடியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
India vs New Zealand: ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை!
இந்தப் போட்டியில் இந்தியா 48 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 274 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.