இம்பேக்ட் பிளேயராக 4, 6, 4, 4, 6, 1னு சும்மா சுத்தி சுத்தி அடிச்ச அபிஷேக் போரெல் – டெல்லி 174 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Mar 23, 2024, 5:37 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது.


பஞ்சாப் மாநிலம் மொஹாலியிலுள்ள முல்லன்பூர் பகுதியிலுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 2ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

2 பவுண்டரி அடிச்சு லட்டு மாதிரி கேட்ச் கொடுத்து வெளியேறிய ரிஷப் பண்ட் - ரசிகர்கள் ஏமாற்றம்!

Tap to resize

Latest Videos

இதில் மார்ஷ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 20 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் பந்தில் ராகுல் சாஹரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 29 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலமாக ஹர்ஷல் படேல் பஞ்சாப் அணியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து ஷாய் ஹோப் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து விளையாடினர். இதில், ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து கஜிசோ ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட 454 நாட்களுக்கு பிறகு மைதானத்திற்கு வந்த ரிஷப் பண்ட்டிற்கு ரசிகர்கள் உள்பட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

IPL 2024: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் – வைரலாகும் ரச்சின் – ரவீந்திரா புகைப்படம்!

அதன் பிறகு பேட் செய்த பண்ட், தனது 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்தப் போட்டியில் 13 பந்துகள் மட்டுமே பிடித்த நிலையில் 2 பவுண்டரி உள்பட 18 ரன்கள் எடுத்து ஹர்ஷல் படேல் ஓவரில் லட்டு மாதிரியாக கேட்ச் கொடுத்து ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த ரிக்கி பூய் 3, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5, அக்‌ஷர் படேல் 21, சுமித் குமார் 2 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக இம்பேக்ட் பிளேயராக வந்த அபிஷேக் போரேல் கடைசி 10 பந்தில் 32 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 174 ரன்கள் குவித்தது.

454 நாட்களுக்கு பிறகு திரும்பிய ரிஷப் பண்ட் – புதிய மைதானம், யாருக்கு சாதகம்? டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங்!

பஞ்சாப் அணியின் கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரை போரெல் எதிர்கொண்டார். அவர் 4, 6, 4, 4, 6, 1 என்று வரிசையாக பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசவே டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆனால் அதிக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலில் ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்து 47 ரன்கள் கொடுத்துள்ளார்.

கஜிசோ ரபாடா, ஹர்ப்ரீட் பிரார் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர், 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் விளையாட இருக்கிறது.

இலவச டிக்கெட் – அரசு செலவல்ல – போக்குவரத்து கழகத்துடன் சிஎஸ்கே ஒப்பந்தம் – முழு தொகையை செலுத்திய சிஎஸ்கே!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

 

click me!