2 பவுண்டரி அடிச்சு லட்டு மாதிரி கேட்ச் கொடுத்து வெளியேறிய ரிஷப் பண்ட் - ரசிகர்கள் ஏமாற்றம்!

By Rsiva kumar  |  First Published Mar 23, 2024, 5:10 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 2ஆவது போட்டியில் 454 நாட்களுக்கு பிறகு களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 2 பவுண்டரி உள்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.


பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 2ஆவது போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக பேட்டிங்கை தொடங்கி ரன்கள் குவித்தனர்.

இதில் மார்ஷ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 20 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் பந்தில் ராகுல் சாஹரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 29 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுப்பு தெரிவிக்க ஸ்மார்ட் ரெவியூஸ் சிஸ்டம் மூலமாக டிவி ரீப்ளேயில் வார்னருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதன் மூலமாக ஹர்ஷல் படேல் பஞ்சாப் அணியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து ஷாய் ஹோப் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து விளையாடினர். இதில், ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து கஜிசோ ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட 454 நாட்களுக்கு பிறகு மைதானத்திற்கு வந்த ரிஷப் பண்ட்டிற்கு ரசிகர்கள் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அதன் பிறகு பேட் செய்த பண்ட், தனது 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்தப் போட்டியில் 13 பந்துகள் மட்டுமே பிடித்த நிலையில் 2 பவுண்டரி உள்பட 18 ரன்கள் எடுத்து ஹர்ஷல் படேல் ஓவரில் லட்டு மாதிரியாக கேட்ச் கொடுத்து ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

AN EMOTIONAL MOMENT FOR CRICKET FANS...!!!!

- WELCOME BACK, PANT. ❤️pic.twitter.com/0FSOSaaWNF

— Johns. (@CricCrazyJohns)

 

click me!