சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் ஒரே குடும்பம் போன்று அன்போடும், அரவணைப்போடும் அன்பை வெளிபடுத்துவார்கள். அதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.தோனி. இவர், மற்றவர்களிடத்தில் காட்டும் அன்பு, பற்று, மனிதாபிமானம் ஆகியவற்றின் காரணமாக அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது அன்பு காட்டி வருகின்றனர். மொத்தத்தில் சிஎஸ்கே வீரர்கள் ஒரு குடும்பமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்று சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. பின்னர், 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது.
இதில் அறிமுகமான ரச்சின் ரவீந்திரா பீல்டிங்கின் போது 2 கேட்சுகள் பிடித்தார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்து கரண் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதில் ஜடேஜா 17 பந்தில் ஒரு சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில்100 சிக்ஸ் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 7ஆவது போட்டி நடைபெறுகிறது.
Ravindra with Ravindra. 🤝 pic.twitter.com/xUiFKZP6Pb
— Mufaddal Vohra (@mufaddal_vohra)